Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி உண்டு என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |