Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியியல் பூங்கா இன்று திறப்பு…. பார்வையாளர்களுக்கு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு அந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் பொதுமக்கள்  திறக்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |