Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவுக்கு ஒரு நாள் பொது விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க இருந்த நிலையில் அதில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதன் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு அக்டோபர் 9ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அன்று பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளதால் அந்த நாளில் பூங்கா திறக்கப்படாது என்று வனத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |