பேரூராட்சியின் பெயரை வாகனத்தில் தவறாக எழுதி இருந்ததால் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குழப்பமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு வாகனங்களில் கோதநல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கோதநல்லூர் பேரூராட்சி வாகனம் இல்லாததால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். அப்போதுதான் வாகனத்தில் கொத்தநல்லூர் பேரூராட்சி என தவறாக எழுதி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.