Categories
ஆட்டோ மொபைல்

வண்டி வாங்குற ப்ளான் இருக்கா?…. அதிரடியாக உயரப் போகும் ரேட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் EMI முறையில் தான் அதிக அளவு வாங்குகின்றனர். வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் தற்போது EMI மூலமாக வாங்குகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பலரும் வாகன கடன் வாங்குவதை தவிர்த்து விடுவார்கள்.இது வங்கிகளுக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரிய பின்னடைவை.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில்,வாகன கடன்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டால் கார் விற்பனையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. அதற்கு வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இருசக்கர வாகன விற்பனையில் பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும். ஒரு வேளை அடுத்த முறையும் வட்டி உயர்த்தப்பட்டால் கார் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இது வாகனம் வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |