திமுக இன்றைய சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , சட்டசபை கூட்டத் தொடரில் தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே சபாநாயகர் சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் , விவாதிக்க வேண்டுமென்று மனு கொடுத்தோம்.
வண்ணாரப்பேட்டையில் மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி ஒரு பெரிய அக்கிரமத்தை செய்திருக்கிறார்கள். முதல்வர் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை இதனால் ஒருநாள் அடையாள வெளிநடப்பு செய்கின்றோம் என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.