தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வாறு தமிழக மக்களின் நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் வண்ணமீன் வளர்ப்போருக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.