போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கணக்கெடுப்பு படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் நிலக்கரி பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து நிலக்கரி அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும் அளவிற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த நிலக்கரி அமைச்சகம் மின்தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். மேலும் நிலக்கரி இந்தியா லிமிடெட் மின் துறைக்கு 275 மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்கியிருக்கிறது. இது மின் உற்பத்திக்கு போதுமான அளவாகும். மேலும் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.