குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வதோதரா மாவட்டம் வகோடிய கிராஸிங் நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனிடையே வதோதரா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வதோதரா மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.