Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வந்தடைந்த இரும்பு கர்டர்கள்…. பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. அதிகாரிகள் தகவல்….!!

பாம்பன் தூக்குபாலம் அருகே கட்டப்படும் புதிய ரயில் பாலத்தின் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் தூக்குபாலம் அருகே சுமார் 432 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதுவரை பாம்பன் பாலத்தில் இருந்து தூக்குப்பாலம் வரை கடலில் இரும்பு தூண்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து மண்டபம் கடற்பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடற்பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதற்கு தேவைப்படும் இரும்பு கர்டர்கள் சத்திரக்குடியில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் ரயில் நிலையத்திற்கு அருகே கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் புதிதாக கட்டப்படும் பாலத்தின் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |