நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு ஆந்திராவில் இருந்து 2,600 டன் மக்காசோளம் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் மக்காசோளம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்திலிருந்து 140 சரக்கு லாரிகள் மூலம் தீவனங்கள் கோழி பண்ணைகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் தீவன மூலப்பொருட்கள் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் வாங்கி வரப்பட்டது.
இந்த மக்காச்சோள மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 140 லாரிகளில் ஏற்றப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.