தஞ்சாவூரில் இருந்து சுமார் 1,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,200 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது.
இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 50 லாரிகள் மூலம் ஏற்றி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.