Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த 2,600 டன் தவிடு…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்…. வணிப கிடங்குகளுக்கு விநியோகம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,600 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் மூலம் நாமக்கல் மற்றும் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Categories

Tech |