உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழியாக இண்டர்நெட் பயன்படுத்தி பேசப்படும் ஆடியோ கால், வீடியோ கால் அழைப்புகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க வேண்டும் என ட்ராய், இந்திய தொலைத் தொடர்பு துறையிடம்(DOT) கோரிக்கை வைத்துள்ளது.
2008 முதலேயே இந்த கோரிக்கை இருந்தாலும், டாட் தற்போது இது குறித்து தெளிவான விளக்கம் தரும்படி ட்ராயிடம் கேட்டுள்ளது. இதனால் இந்த கோரிக்கை ஏற்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. கோரிக்கை ஏற்றுக் கொள்ளபட்டால், ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்.