வந்தவாசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே இருக்கும் இளங்காடு கிராமத்தில் செந்தில் ரங்கன் என்பவரின் விவசாய நிலத்தில் காட்டுப்பகுதியிலிருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்பொழுது புள்ளிமான் கம்பு வேலியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்து அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை கடித்து குதறியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ர் வருவாய்த்துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்கள்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்து புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து அதிகாரிகள் வந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை மீட்டு தனியார் கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். அங்கு புள்ளி மானை பறிசோதித்த கால்நடை டாக்டர் நாய் கடித்ததில் புள்ளிமான் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.