செல்போன் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பும் அம்சமானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட உள்ளது. யுபிஐ மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது.
இதன் மூலமாக இந்தியர்கள் இனி ஆன்லைன் மூலமாக சிங்கப்பூருக்கு கூகுள் பே, போன் பே உழிட்ட சேவைகள் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு பிறகு பிற நாடுகளுக்கும் யூபிஐ மூலமாக பணம் அனுப்பும் வசதி கொடுக்கப்படலாம் என்று பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.