பி எம் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை 11-வது தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் 12வது தவணை பணத்திற்கு விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு இதுவரை எட்டு மாற்றங்களை செய்துள்ளது. சமீபத்தில் தான் ekyc செய்வதை கட்டாயமாக்கியது. இந்த மாற்றத்தின் அடிப்படையில் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பணம் கிடைக்காது. விதிமுறையின் படி தகுதியற்ற விவசாயிகளாக இருந்தால் ஏற்கனவே நீங்கள் பெற்ற தவணை பணத்தையும் உடனடியாக திருப்பித் தர வேண்டும்.
இல்லையேல் அரசு அதை உங்களிடமிருந்து திரும்ப பெறும். உண்மையிலேயே பி எம் கிஷான் திட்டத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து மத்திய அரசு மிகவும் கண்டிப்புடன் உள்ளது. ஆவணங்கள் புதுப்பிக்கா படாவிட்டாலும் தவறான முறையில் பணம் செலுத்துபவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இதுவரை பெறப்பட்ட அனைத்து தவணைகள் பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும். ஏனெனில் இந்த திட்டத்தில் தகுதி இல்லாதவர்கள் ஏராளமானவர்கள் மோசடி மூலமாக பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்களும் பயன்பெற்றுள்ளனர்.
விதிமுறைப்படி இது தவறாகும். அதேபோல கணவன் மனைவி இருவருமே பயன்படுத்தியுள்ளாகர். இதுவும் தவறாகும். எனவே அத்தகைய தவறை செய்தவர்கள் தாமாகவே முன்வந்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.