Categories
டெக்னாலஜி

வந்தாச்சி 5ஜி…! Airtel சிம் கார்டை மாற்ற வேண்டுமா….? வெளியான முக்கிய தகவல்…..!!!!

சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றையை மத்திய அரசின் தொலை தொடர்பு துறை ஏலம் விட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைகற்றையை ஏர்டெல், ஜியோ, வோடா போன் ஐடியா நிறுவனங்கள் ஏலத்தில் வாங்கின. கடந்த ஒன்றாம் தேதி என்று பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார் . இதனை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் 5g சேவை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது. இந்தியாவின் நான்கு நகரங்களில் தசரா பண்டிகை முன்னிட்டு ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், 5ஜி சேவைக்காக சிம் கார்டை மாற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 5ஜி சேவை பெற சிம் கார்டை மாற்ற தேவையில்லை. அனைத்து 5-ஜி ஸ்மார்ட் போன்களிலும் சேவையை பெறலாம். அந்த வாடிக்கையாளர்கள் தற்போது செய்திருக்கும் 5G சேவையை பெற முடியும். ஏர்டெல் 5-ஜி பிளசில் நெட்வேகம் இப்போது இருக்கும் டேட்டா பேக்கேஜ் ரீசார்ஜ் திட்டத்திலேயே இருப்பதைவிட 30, 40 மடங்கு அதிகமாக  என தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |