சிலிண்டர் என்பது மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இண்டேன் புதிய வகை ஸ்மார்ட் சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர்களுக்கு இண்டேன் கம்போஸ்ட் சிலிண்டர் என்று பெயர் வைத்துள்ளது. நாம் ஏற்கெனவே பயன்படுத்திவரும் உருளை வடிவ இரும்பினாலான சிலிண்டரை விட இந்த சிலிண்டர்கள் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் எவ்வளவு கேஸ் செலவாகி இருக்கிறது, மீதம் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அடுத்த சிலிண்டர் வாங்குவது பற்றி எளிதாக முடிவெடுக்க முடியும்.
இதில் முந்தைய சிலிண்டரை விட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இதனுடைய எடை மிகவும் குறைவானது. எவ்வளவு கேஸ் இருக்கிறது என்று என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இது துருப்பிடிக்காது, தரையில் கரை ஏற்படுத்தாது. இதன் முதற்கட்டமாக இந்த சிலிண்டர்களை 5 கிலோ, 10 கிலோ எடையுடன் டெல்லி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த சிலிண்டர் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.