பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு மின்சார வாகனத்தை மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மற்றொரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார வாகனங்களுக்கு பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கான கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.