Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்தாச்சு… வந்தாச்சு…! வீட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. நெகிழ்ந்து போன ரஹானே… !!

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை விமான நிலையம் வந்திறங்கினர். இவர்களுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

மேலும் விஜய் பாட்டீல்,   அஜின்கயே நாயக், அமித் தானி, உமேஷ் கான்வில்கா போன்ற மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வீரர்களை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ரஹானே விமானநிலையத்திலேயே கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். மேலும் தொடரின் ஹீரோவான ரிஷப் பண்ட் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். மேலும் நடராஜன் ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் அறிமுகமாகி அசத்தினார். அவர் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தவுடன் அவரை அங்கிருந்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் அவரின் சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் இன்று காலையில் சென்னை விமான நிலையத்தை  வந்தடைந்தனர். மேலும் கேப்டன் ரஹானே மந்த்ராவில் இருக்கும் அவரது இல்லதிற்கு வந்தார். அப்போது காரிலிருந்து இறங்கிய ரஹானே தன் வீட்டில் காலடி வைத்தவுடன் ட்ரம்பெட் வாத்தியங்கள் ஒலிக்க அஜின்கியா அஜின்கியா என்று முழக்கமிட்டு மலர் தூவி அவரை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இதனை ரஹானே உற்சாகமாக தன் மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்றுக்கொண்டார்.

Categories

Tech |