Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வந்தன்னா….. “ஒரே அடி”… பாக்குறியா…. மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்..!!

மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாலக்கோடு மின்சார துறை அலுவலகத்திற்கு பெண் ஒருவர் உறவினருடன் வந்துள்ளார். அப்போது மின் ஊழியர் அலுவலரை பார்க்க விடாமல் வழியில் நிறுத்திப் பேசி உள்ளார்..மின் துண்டிப்பு காரணமாக அலுவலரை சந்திக்க புகார் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்மணி தெரிவிக்கும் போது குப்புராஜ் அவரை வழிமறித்து, நான் தான் அலுவலர் எங்க பொய் சொல்ல வேண்டுமானாலும் சொல்லு என்று தரக்குறைவாக பேசி உள்ளார்..

அப்பொழுது அருகில் இருந்த உறவினர் ஒருவர் இதனை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.. அதை கண்ட குப்புராஜ் திடீரென ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த மின் மீட்டரை எடுத்து தாக்க முயன்றார்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.. இதனை தொடர்ந்து தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |