Categories
அரசியல்

வந்தாரு…. போனாரு…. ரிப்பீட்டு!…. ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மக்களுக்கு குப்பையை தான் கொடுத்தனர் என்று கூறி திமுகவை சாடிய ஜெயக்குமார் உள்ளாட்சியில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை திமுக மோசடி மூலம் தனது திட்டம் என்று கூறி வருகிறது.

டிவியை போட்டாலே ஆணழகன் ஸ்டாலின் வந்தாரு… போனாரு… ரிப்பீட்டு! என்பது போலத்தான் இருக்கிறது என்று கூறி முதல்வர் ஸ்டாலினை ஜெயக்குமார் கலாய்த்துள்ளார். அதேபோல் திமுகவினர் கொள்ளை அடித்த பயணத்தை பயன்படுத்தி கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள். ஆனால் கட்சியினர் விலை போனால் அது மன்னிக்கவே முடியாது குற்றம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |