சூர்யா ர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் கார்த்தி, சூர்யா குறித்து தனது இணைய பக்கத்தில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். அவர் தன் சொந்த சாதனையை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார்.” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கார்த்தியின் பதிவை பகிர்ந்துள்ள சூர்யா “வந்தியத்தேவா… அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.