Categories
மாநில செய்திகள்

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க… நம்ம சின்னம்மா… ஜனவரி 27 சசிகலா விடுதலை…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகிறார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறையில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் என்பதால் சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தார். இந்நிலையில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா வழக்கறிஞர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இந்நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என்று அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையேற்று விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |