விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் பழையபடி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா, தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஸாம்பி, மூக்குத்தி அம்மன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்ட்டி ஆகிய படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் யாஷிகா தோழி மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு திரும்பினார்.
அப்போது மாமல்லபுரம் அருகே யாஷிகா ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு கை, கால், இடுப்பு என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக யாஷிகா மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களாகதான் எழுந்து நடமாடுகிறார் யாஷிகா ஆனந்த். தற்போது போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மெரூன் நிற உடையில் அவர் நடத்திய போட்டோ ஷூட் இன்ஸ்டாவை திணறடித்தது. அந்த போட்டோக்கள் பெரும் வைரலாகி லைக்ஸ்களை குவித்தன. இந்நிலையில் யாஷிகா டைட் பார்ட்டி வியரில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் .