Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வந்துட்டேன்…! ஏலத்தில் எடுத்ததும் ட்விட் போட்ட ஸ்டோக்ஸ்….. வைரலாகும் போட்டோ…. வரவேற்கும் ரசிகர்கள்..!!

சென்னை அணி ஏலத்தில் எடுத்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டோக்ஸ் மஞ்சள் நிற புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 900 மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 405 வீரர்களை இறுதி செய்தது ஐபிஎல் நிர்வாகம். அதிலிருந்து 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். இவர்களிலிருந்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 இந்திய வீரர்களை 10 அணிகளுமே 167 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியது. அதில் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோவுக்கு மாற்று ஆல் ரவுண்டராக மிக முக்கிய வீரரை தேர்வு செய்ததில் கவனம் செலுத்தியது.

அதன்படி முதலில் ஏலத்தில் களமிறக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் கரனை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டியது. ஆனால் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதன் பின் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை வாங்க பல அணிகளும் போட்டி போட விடாப்பிடியாக 16.25 கோடிக்கு இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க காரணம், அவர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறார். அதே சமயம் தற்போது இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டனாக மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். இங்கிலாந்து அணி 2 முறை உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். சென்னை அணி ஏலத்தில் எடுத்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் எல்லோ நிற புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் இந்த புகைப்பட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை ரசிகர்கள் இதனை பார்த்து பல்வேறு கமெண்ட் செய்து வருகின்றனர். வரும் ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியின் துருப்புச் சீட்டாக இருப்பது மட்டுமின்றி வருங்கால கேப்டன் ஆகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |