அண்மையில் துவங்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், அதன் வசதி மற்றும் வேகம் ஆகிய அம்சங்களால் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து உள்ளது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இப்போது ஸ்லீப்பர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸை இயக்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில் 200 ஸ்லீப்பர்களுடைய வந்தேபாரத் விரைவு ரயிலுக்கான டெண்டர்களானது இந்திய ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு போன்றவை அடங்கும். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மேம்படுத்துவதற்குரிய டெண்டரையும் ரயில்வே வெளியிட்டு இருக்கிறது.
டெண்டரின் கடைசி தேதி 2022 ஜூலை 26 என இந்திய ரயில்வே நிர்ணயித்து உள்ளது. ஸ்லீப்பர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸின் எல்லா பெட்டிகளும் ஏசி பெட்டிகளாக இருக்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்து இருக்கிறது. ஸ்லீப்பர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் நடுத்தர மற்றும் வெகுதூர வழித் தடங்களில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மேம்படுத்தும் பணி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரிலுள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலை (அல்லது) சென்னையிலுள்ள ஆலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியரயில்வே அளிதுள்ள தகவலின் அடிப்படையில், ஸ்லீப்பர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் டெலிவரிக்கான காலக்கெடு 6 வருடங்கள் மற்றும் 10 மாதங்கள் என டெண்டரில் கூறப்பட்டு உள்ளது. இந்த காலத்துக்குள் 200 ரயில்கள் தயாரிக்கப்பட வேண்டும். 16 பெட்டிகள் கொண்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸில் 1 முதல் தர ஏசி, 4 இரண்டாம் தர ஏசி மற்றும் 11 3ம் தர ஏசி பெட்டிகள் இருக்கும். பின் 20 பெட்டிகள் உடைய ஸ்லீப்பர் ரயிலில் முதல் தர ஏசி, 4 2ஆம் தர ஏசி மற்றும் 15 மூன்றாம் ஏசி தர பெட்டிகள் பொருத்தப்படுகிறது.