Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம்… சொந்த நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ” கடந்த 19ம் தேதி வரையில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வழிகளில் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது வரை வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாவது கட்டத்தில் 500 சர்வதேச விமானங்கள் மற்றும் 130 உள்நாட்டு விமானங்கள் இயங்கி வருகின்றன. அவை 22 நாடுகளில் இருந்து நாடு முழுவதும் உள்ள 23 விமான நிலையங்களை வந்தடைந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்த மாத இறுதிக்குள் 357 சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |