சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் போல அதிவிரைவு பார்சல் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.சென்னையில் உள்ள ஐ சி எப் தொழிற்சாலையில் முதன் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரயில் பதினெட்டு என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. இது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டு புதுடெல்லி, வாரணாசி மற்றும் வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்சல் ரயில் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பார்சல் ரயில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.பார்சல் சேவைக்கு தேவையான அனைத்து வசதிகள் இந்த ரயிலில் இடம்பெறும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ரயில் தயாரிப்பு பணி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இரு நகரங்களுக்கு இடையே பாயிண்ட் டு பாயிண்ட் அதிவிரைவு ரயிலாக இயக்கப்படும். இதில் தனியார் நிறுவனங்கள் தங்களது பொருட்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.