சத்தீஸ்கர் மாநிலத்தில் நாக்பூர் – பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிலாய் நகர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்லை தூக்கி எறிந்துள்ளனர். இதில் ரயிலின் ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories