Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்!…. 6 மாதங்களில் இத்தனை முறை விபத்தா?…. மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் வந்தே பாரத் ரயில் சேவையானது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இப்போது இந்த ரயில் சேவை டெல்லி – வாரணாசி, சென்னை – மைசூரு, மும்பை – காந்திநகர் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |