Categories
சினிமா தமிழ் சினிமா

வந்த இடத்தை மறந்துறக்கூடாது…. நெல்சன் குறித்து பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு…!!!!!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது’பீஸ்ட்’  படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது.  வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்.கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப் குமார்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்னரே ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கோலிவுட்டையே வியக்க வைத்திருக்கிறார்  நெல்சன். ‘அண்ணாத்த’ படத்தினை ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த நிலையில் சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார், நெல்சன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் தற்போது  வைரலாகி வருகிறது. “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.வி.உதய குமார்.    நெல்சன் குறித்து பேசுய போது, வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும் தலைக்கனம் இருக்கக் கூடாது.இப்போ கிளம்பி வரும் போது தம்பி ஒருத்தர் போன் பண்ணியிருந்தார் எடுத்தேன். அண்ணே வணக்கம்னே. டைரக்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன்ணே.. கார்டு நல்லா சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. சரி தம்பி நீ யாருப்பான்னு கேட்டேன். நான் தான் சார் நெல்சன். இப்போதான் விஜய் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்னு சொன்னாரு.

எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க. நெல்சனை மாதிரி இயக்குநர்களை நான் போற்றவும், பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்கு போனாலும், வந்த இடத்தை மறந்துடக் கூடாது என இயக்குநர் உதயகுமார் நெல்சனை பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |