வனச்சரகர் பதவி உயர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில் வனக்காப்பாளர்களுக்கு வனசரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதம் செய்யப்படுகிறது.
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.