பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில் சித்திக் என்பவரின் வீட்டில் கடல் அட்டைகளை அவித்துக் கொண்டிருந்தநிலையில் வனத்துறையினர் கைப்பற்றினார்கள்.
சுமார் 150 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை கைப்பற்றி முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சையது என்பவரின் மகன் நைனார் முகமது என்பவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் இது தொடர்பாக தேவிபட்டினம் சித்திக் என்பவரை தேடி வருகின்றார்கள்.