Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட ஜிப்லைன் …. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலாப்பயணிகள்….!!!

புதிதாக அறிமுகப்படுத்திய ஜிப்லைன் சுற்றுலா பயணிகளிடம்   வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மன்னவனூர் பகுதியில் வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த  சுற்றுலா மையத்தில் பார்சல் சவாரி, தனிநபர் படகு சவாரி, குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பில் எழும்பள்ளம் ஏரியின் இரு கரைகளிலும் 2 தூண்கள்  அமைத்து 245 மீட்டர் நீளம் இரும்பு வடம் இணைக்கப்பட்டது.    இந்த மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுமார் 5 நிமிடத்தில் செல்ல முடியும். இந்நிலையில் நேற்று 40-வது  நாள் சோதனை ஓட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ‘ஜிப்லைன்’ அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ‘ஜிப்லைன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் சுற்றுலா பயணிகள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செல்லலாம். இந்நிலையில் நேற்று ஒருநாள் மட்டுமே 28 பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து  சுற்றுலா பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சாகசத்தை சுற்றுலா பயணிகள் மிகவும் வரவேற்றுள்ளனர். மேலும்  இங்கு சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதி மற்றும் சிறுவர் பூங்காவும் விரைவில் திறக்கப்படும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |