வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மயிலாடும்பாறை காவல்துறையினர் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோரையூத்தைச் சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.