Categories
மாநில செய்திகள்

“வனத்துறையில் நவீன தொழில்நுட்பத் வசதிகள்”…… மொத்தம் 6 பிளான்கள்…. தமிழக அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறையின் கூடுதல் செயலாளர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இந்த நவீனமயமாக்க திட்டமானது மனித மேலாண்மை உட்பட 6 முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதன் பிறகு சுமார் 8.55 கோடி ரூபாய் செலவில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு வன பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி போன்றவைகள் வழங்கப்படும். இந்நிலையில் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வனத்துறையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும்.

இதனையடுத்து வனவிலங்குகளின் மேலாண்மைக்காக கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மையம், புதிதாக அமைக்கப்பட்ட வன குற்ற கட்டுப்பாட்டு மையத்தில் சைபர் செல் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க் போன்ற தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும். வனவிலங்கு பாதுகாப்புக்கான நவீன ஆயுதங்கள் தேவை குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் கழு அமைக்கப்படுவதோடு, மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். வனத்தீ கட்டுப்பாடு மற்றும் மீட்புக் கருவிகள் வழங்கப்படுவதோடு, 5 இடங்களில் உயர் தொழில்நுட்ப வன நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

அதோடு ஆளில்லா வான்வெளி வாகனங்களும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்தப்படும். சென்னையில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனமானது தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி பணிகளை ஊக்குவித்தல், தமிழ்நாடு வனத்துறை திட்டங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்யும். மேலும் வன பாரம்பரியத்தை பாதுகாக்க பல புதிய தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |