மின்மினி பூச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் விலங்குகள் மட்டும் இல்லாமல் மின்மினி பூச்சிகளும் அதிகமான அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆனைக்குட்டி சோலை என்ற இடத்தில் இரவு நேரங்களில் மின்மினிப்பூச்சிகள் அழகாய் மின்னுகிறது.
இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது.