தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது.
ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி கணினி வழி தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளிலும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்தால் ஹால் டிக்கெட் பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.