வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் ரூ 15,000 அபராதம் விதித்தார்கள்.
தென்காசி மாவட்டம், கடையத்தில் இருக்கும் வனசரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர்கோவில் பீட் எல்லையில் அத்திரிமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறாமல் யாரும் செல்லக்கூடாது. இந்நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் அனுமதி பெறாமல் இந்த மலைக்கு சென்றார்கள். இதனால் வனத்துறையினர் இவர்களை கண்டித்து ரூ15,000 அபராதம் விதித்தார்கள்.