கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் தீயினால் கருகி சாம்பலானது. இதனை தொடர்ந்து இந்த வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் 7000 மக்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். மேலும் வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பதற்காக கலிபோர்னியாவின் தீயணைப்புத்துறையினர் இரவு பகலாக முயற்சித்து வருகிறார்கள்.