உடும்பை பிடித்து வனப்பகுதியில் வைத்து சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியில் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடி அங்கு வைத்து சமைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் உடனடியாக வனப்பகுதிக்கு விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை பிடித்தனர். இதனையடுத்து அவர்களை புளியங்குடி வனசரகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவர்கள் இருவரையும் சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.