மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முனிராஜ் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது நாகராஜ் என்பவர் வனவிலங்குகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு நிலத்தை சுற்றி அமைந்திருந்த மின்வேலியை முனிராஜ் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார்.
இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த முனிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முனிராஜை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மின் வேலி அமைத்த நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.