Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு… பாதிப்பு தடுக்க அரசு நடவடிக்கை…. விவாதத்தில் வெளியான கருத்து…!!!!!

”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., – கே.பி.முனுசாமி கூறிய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள  திம்மப்ப நாயுடு என்பவர் யானை தாக்கி இறந்தார்.அவரது குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஊருக்குள் யானை வராமலிருக்க, மின் வேலி அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் இது குறித்து பேசிய போது,  கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 50 முதல் 175 யானைகள், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனப்பகுதியில் முகாமிடும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, கர்நாடகா மாநில வனப் பகுதிக்கு செல்லும். அதனால் இரவு நேரங்களில் காப்புக் காடுகளில் இருந்து வரும் யானை கூட்டங்களை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கடந்த 9ம் தேதி திம்மப்ப நாயுடு தன் விவசாய நிலத்திற்கு சென்றபோது, காப்புக் காட்டில் இருந்து வந்த ஒற்றை யானை தாக்கியதில் இறந்தார். அவரது குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் காட்டு விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, யானை புகா அகழிகள், தடுப்பு சுவர், கம்பி வேலிகள், சூரிய சக்தியில் இயங்கும் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என விவாதம் நடைபெற்றது.

Categories

Tech |