Categories
தேசிய செய்திகள்

வனவிலங்கு பாதுகாப்பு திட்டம்… மாநில வாரியம் மறுசீரமைப்பு… ஒடிசா அரசு அதிரடி…!!!

ஒடிசாவில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாக்க மாநில வாரியம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டு வரும் வனப்பகுதிகளில் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய வகையில், ஒடிசா அரசு சார்பாக வனவிலங்குகளை காண மாநில வாரியம் மறு சீரமைக்க பட்டிருப்பதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. அதன் தலைவராக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் துணைத் தலைவராக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிக்ரம் அருகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திருத்தம் 6 ஆவது பிரிவின் கீழ் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு இருக்கின்ற இந்த மாநில வாரியம் ஆறு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று ஒடிஸா மாநில அரசு கூறியுள்ளது.

 

Categories

Tech |