நடிகை வனிதா தன்னை அடிக்க செருப்பை ஓங்கினார் எனறு செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியுள்ளார்.
நடிகை வனிதா மற்றும் சூர்யா தேவி விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறாக பரப்புவது கொலை மிரட்டல் கொடுப்பது என்று பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது சூர்யா தேவி புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டது. சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்ற வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் அவர்கள் எச்சரித்தனர். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால சூர்யா தேவியை வடபழனி அனைத்து மகளிர் நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த சூரியா தேவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “நேற்று இரவு உங்களிடம் பேச வேண்டும் என்றுதான் போலீசார்கள் என்னை அழைத்தார்கள். என்னுடைய வழக்கறிஞர் இந்த சமயத்தில் செல்ல வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் எனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசுவதற்காக தான் நாங்கள் வரச் சொல்கிறோம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் என்னை கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள். மேலும் போலீசார் வனிதாவுக்கு மட்டும் தான் ஆதரவாக பேசினார்கள். என்னை கண்டதும் வனிதா காலில் இருந்த செருப்பை கழட்டி செருப்பால அடிப்பேன் என்று சொன்னார். அதற்கு நான் முடிந்தால் அடி பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்கு அவளை எதுவும் சொல்லாமல் என்னை மட்டும் இழுத்துச் சென்று ஒரு தனி அறையில் அமர வைத்தனர். நான் வனிதா மீது அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கஞ்சா விற்பதாக பொய்யான தகவலை அவர் கூறியிருந்தார். அவர் கொடுத்த பொய்யான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் அவரைப் பற்றி நான் தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன்” என்று கூறியுள்ளார் சூர்யா தேவி.