Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதா போலவே யோசித்த அவரது மகள்… இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு…!!!

பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகள், விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இவர் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து இவை அனைத்தும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இதுகுறித்து வனிதா ‘ நான் யாராலும் இதுவரை நிராகரிக்கப் படவில்லை, நான்தான் எல்லாரையும் நிராகரித்து உள்ளேன். இனி வாழ முடியாது என்பதை முடிவு செய்து தான் இருவரும் பிரிந்தோம்’ என்று கூறியிருந்தார் .

Cheesy Potato Bundles | Live | Cook with VV | Vanitha Vijaykumar & Jovika  Vijaykumar | Nestia

இதையடுத்து வனிதா தனது இன்ஸ்டாகிராமில் ‘மீண்டும் காதல் இப்போது திருப்தியா’ என பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் வனிதாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து பதிவிட்டுள்ளார் . அதில் ‘விவாகரத்து பரவாயில்லை, பிரேக் அப் பரவாயில்லை ,அதிலிருந்து கடந்து வருவதும் ஓகேதான் ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார் . இந்தப் பதிவுக்கு வனிதா போலவே அவரது மகளும் யோசிப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |