Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து…. பா.ம.க வினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு முனை சாலையில் பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் நாராயணன், முன்னால் துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கிருஷ்ணன், மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகி சரவணன், ஒன்றிய செயலாளர் அன்பரசு, நகர செயலாளர்கள் கராத்தே மணி, மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேப்போன்று சங்கராபுரம் பகுதியிலும் பா.ம.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |