Categories
அரசியல்

“வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தா!”…. இப்ப இந்த ஆட்சி தா இருந்துருக்கும்…. இது என்ன புது உருட்டா இருக்கு….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா யாரை எங்கு வைத்து பார்ப்பார், யாரிடம் எவ்வாறு பேசுவார் பழகுவார் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இவருக்கு அத்துப்படி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து ஒரேடியாக விலகி விவசாயத்தில் தனது பொழுதை கழித்து வருகிறார் பூங்குன்றன். தற்போது அவரின் பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளார். “காலத்தின் கட்டளையை பொருத்தே ஒருவரின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. எப்படியேனும் நாம் வென்று விடலாம் என்று ஒரு மனிதன் எண்ணுவது மாபெரும் முட்டாள்தனம். காலத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மனிதன் தன்னுடைய வாழ்வில் வெற்றி பெறமுடியும்.

கடந்த ஆண்டு அதிமுகவின் ஆட்சி பொறுப்பை பொருத்தவரை மெஜாரிட்டி சமூகத்தினரான முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் சமூகத்தினர் பதவிகளை அலங்கரித்தனர். இதேபோல் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து இருந்தால் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற பட்டிருக்கலாம். இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக அவர்களுக்கு பதவி வழங்கப்படும் என அதிமுக அறிவித்திருந்தால் தற்போது ஆட்சி அதிமுகவின் ஆட்சி கைகளில் இருந்திருக்கும். இவையெல்லாம் காலத்தின் கைகளில் தான் உள்ளன. காலம் நமக்கு கருவியல்ல நாம் தான் காலத்தின் கருவி. காலம் நமக்கு வழி விடும்போது அத்தனையையும் உதாசீனம் செய்துவிட்டு தற்போது யோசித்து எந்த பலனும் இல்லை.” இவ்வாறு அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |